Benefits abound in watermelon ......! - Go General

Education, General tips and Health tips

Wednesday 14 March 2018

Benefits abound in watermelon ......!


தர்பூசணியில் நிறைந்திருக்கும் நன்மைகள்……!

கடும் வெயில் காரணமாக ஏற்படும் உடல் உஷ்ணத்தை சமாளிக்க தர்பூசணி பழங்களை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்பூசணி புத்துணர்ச்சி தரும் பழம் மட்டும் அல்ல. வெயில் காலத்திற்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற பழமும் கூட. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும், இரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். உடல்நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பூசணியில் நிறைந்துள்ள சத்துக்கள் :
தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் ஆகியவை உள்ளது. 100 கிராம் தர்பூசணியில், 90மூ தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7மூ உள்ளது.

இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து தர்பூசணி. தர்பூசணியில் வைட்டமின் ஏ வைட்டமின் சி சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் தர்பூசணி மேம்படுத்துகிறது.

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் :
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனை வராது. தர்பூசணியில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கட்டி, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்தலாம். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பதால், டயட்டில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல பலனை தரும். தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

தர்பூசணியில் சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்பை வெளியேற்றி சுத்தப்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இது யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கும். சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.

தர்பூசணியை அளவாக உட்கொண்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும். கோடையில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது தர்பூசணி.

No comments: