Things to consider in the summer.....!! - Go General

Education, General tips and Health tips

Saturday 24 March 2018

Things to consider in the summer.....!!


கோடைகாலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!!
கோடைகாலத்தில் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பத்தில் துரித உணவுகளை சமைப்பதால் கிருமிகள் அதிகமாக மற்றும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

குளிர்சாதனப்பெட்டி மற்றும் சமையலறை மூலமாக கிருமிகள் பரவுவதை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது. அதைப் பற்றி இங்கு காண்போம். சோடா உப்பு மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை குளிர்சாதனப்பெட்டியை துடைக்க வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதை தடுக்கலாம். சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

இறைச்சி போன்றவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது, கவரில் போட்டு அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாமல் இருக்கும். இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது மற்ற உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அருகில் வைக்கக்கூடாது.

காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை வெட்டுவதற்கு தனித்தனி பலகை மற்றும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதன் மூலம் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதாக உருவாக வாய்ப்புள்ளது.

கோடைகாலத்தில் இறைச்சி, முட்டை போன்ற உணவுப்பொருட்களை நன்கு சமைத்து உண்ண வேண்டும். கோடைகாலத்தில் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக எப்படி வைத்துக்கொள்வது.

இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்கள், தாதுச்சத்துகள் என்று பலவித சத்துகள் உள்ளன. இத்தகைய இளநீரைக் குடித்தவுடன் தாகம் குறைந்துவிடும் என்பது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி அடையும். இளநீரில் பொட்டாசியத்தின் அளவு அதிகம் என்பதால் இதய நோயாளிகளுக்கும், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு கோடை நீராகாரமாகும். நீரிழிவு நோயாளிகளும் கோடையில் தினமும் இரண்டு இளநீர் பருகலாம். இளநீரில் துத்தநாகம், மாங்கனீஸ் தாதுக்கள் அதிகமாக இருப்பதால் கோடையில் தோல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்குவதில் நுங்கும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதில் உடல் வெப்பத்தைக் குறைக்கிற பல தாதுக்கள் இருக்கின்றன. இவற்றில் உள்ள தண்ணீர்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு பசியையும் தூண்டுகிறது. கோடையில் நீரிழப்பு காரணமாகப் பலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

நீர்ச்சத்து அதிகளவிலுள்ள தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டால் வெயிலினால் ஏற்படும் உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி உடலில் ஏற்படும் வெப்பத்தையும், இரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ளலாம்.

ஆரஞ்சு பழச்சாறு உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தருகின்றது. ஆரஞ்சில் வைட்டமின் ஏ, சி, மற்றும் பி இருப்பதால் வெயில் காலத்தில் உண்டாகும் தோல் வியாதிகளில் இருந்து விடுபடலாம். உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை போக்குவதற்கு இரவில் படுப்பதற்கு முன் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது நன்மை தரும்.

அதிகாலையில் வெதுவெதுப்பான நீருடன் தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து குடித்து வந்தால் வெளியே போகும்போது சோர்வடையாமல் இருக்கலாம்.

கோடைகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும். மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.

No comments: