How to protect children from the sun.....!! - Go General

Education, General tips and Health tips

Saturday 24 March 2018

How to protect children from the sun.....!!


வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்!
வெயிலைத் தவிர்ப்போம் !

வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்குப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். விளையாட வேண்டும் என்று நினைத்தால் 4 மணிக்கு மேல் விளையாட அனுப்பலாம்.
வீடு வெளிச்சமாக இருப்பது மட்டுமின்றி, காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அனல் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்பானங்கள் :
கோடைக்காலத்தில் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அசைவ உணவையும் குறைவாக எடுத்துக்கொள்வது பலன் தரும். குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.

தோல் பிரச்சனைகள் :
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வெயிலில் அதிகமாக விளையாடுவார்கள். வெயில் ஒத்துக்கொள்ளாமல் சில குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு ஏற்படலாம். சில நேரம் திட்டுத்திட்டாகவும் அலர்ஜி ஏற்படலாம். சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் சூரிய ஒளி ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

வெயிலில் அதிகம் அலைந்தால் தோலில் கொப்புளம் ஏற்படலாம். முடியின் வேர் பகுதியில் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்படுவதால் இந்தக் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

கொப்புளம், வியர்க்குரு போன்ற பிரச்சனைகளை தடுக்க குழந்தைகளின் உடலோடு ஒட்டி இருப்பது போன்ற இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தளர்வான உடைகளே ஏற்றவை. அதிலும் பருத்தி ஆடை மிகவும் நல்லது.

நீர்ச்சத்து அவசியம் :
கோடைக்காலத்தில் வெயிலில் அலையாவிட்டாலும்கூட வியர்வை வழியாக உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே இருக்கும். எனவே, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.

வெயிலை சமாளிக்க குழந்தைகளுக்கு இதமான பானங்களை கொடுப்பதே நல்லது. குளிர்பானங்களைப் பருகுவதைவிட பழச்சாறுகளை கொடுப்பது உடலுக்கு ஊட்டத்தையும் உடனடி சக்தியையும் கொடுக்கும்.

குழந்தைகளைத் தினமும் இரண்டு முறை குளிக்க வைப்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும். அடிக்கடி முகத்தைக் கழுவுவதால், சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

No comments: