வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா? - Go General

Education, General tips and Health tips

Friday 26 January 2018

வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா?


வெந்தய டீ குடித்தால் இவ்வளவு 

நன்மைகள் கிடைக்கிறதா?

வெந்தய டீ என்னென்ன நன்மைகளை தருகிறது?



Ø  வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். வெந்தயம் சமைலுக்கு பயன்படுத்தும் பொருளும் கூட. எளிதாக கிடைக்கும் வெந்தயத்தின் பலன் இங்கு பலருக்கும் தெரிவதில்லை. வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியம் என பல சத்துக்களை பெற்றிருக்கிறது.

Ø  வெந்தயம் சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது.

Ø  உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.


Ø  வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

Ø  வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

Ø  இப்படி வெந்தயம் நமக்கு எண்ணற்ற பலன்களை தருகிறது. இங்கு வெந்தய டீ குடிப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது. வெந்தய டீ எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

வெந்தய டீ தயாரிக்கும் முறை :

Ø  ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
Ø  சூடு குறைந்த பின் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

Ø  குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

Ø  வெந்தய டீ, இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அருமருந்தாகிறது.


Ø  பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

Ø  தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.


Ø  கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.

Ø  மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


Ø  வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது.

Ø  தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பாதுகாக்கலாம். 


Ø  வெந்தய டீ அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது.

Ø  தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், டைப்-2 சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம். வெந்தய டீ சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


Ø  வெந்தய டீ, முடி வளர்ச்சியை வேகமாக ஊக்குவிக்கின்றது.

No comments: