குடியரசு தினச் சிறப்புகள்! - Go General

Education, General tips and Health tips

Friday 26 January 2018

குடியரசு தினச் சிறப்புகள்!


குடியரசு நமது உரிமை !   நிலைநாட்டுவது நமது கடமை!

குடியரசு தினச் சிறப்புகள்!


v  ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலைப் பெற்றது.

v   இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்று முடிவு செய்து, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

v   இந்நாளில் நமது தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களையும், நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் நினைவுகூறும் வகையில், ஜனவரி 26-ம் தேதியன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

v  இன்று இந்தியா குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாளாகும்.

v  ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

v  சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.

v  மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

v  தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.

v   நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

v  இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...!

No comments: