How can you deal with summer sunrise .....! - Go General

Education, General tips and Health tips

Wednesday 14 March 2018

How can you deal with summer sunrise .....!


கோடை வெயிலை சமாளிக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை!
கோடைகாலத்தில் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பத்தில் துரித உணவுகளை சமைப்பதால் கிருமிகள் அதிகமாக மற்றும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

சோடா உப்பு மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை குளிர்சாதனப்பெட்டியை துடைக்க வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதை தடுக்கலாம்.

சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

இறைச்சி போன்றவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது, கவரில் போட்டு அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாமல் இருக்கும். இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் போது மற்ற உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அருகில் வைக்கக்கூடாது.

காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை வெட்டுவதற்கு தனித்தனி பலகை மற்றும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான பொருள்களை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதன் மூலம் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதாக உருவாக வாய்ப்புள்ளது.

கோடைகாலத்தில் இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுப்பொருள்களை நன்கு சமைத்து உண்ண வேண்டும்.

கோடையை சமாளிக்க சில டிப்ஸ் :
முலாம்பழத்தை கோடைகாலத்தில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். முலாம்பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூஸாக்கி பருகினால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெறலாம்.

சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி, சிறிது பாலும், தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து பருகினால், இரத்தம் விருத்தியாகும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் கோடைகாலத்தில் வராது.

மாம்பழத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து பருகினால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.

தினமும் கோடைகாலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதோடு, உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.

புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகைப் பொருளாகும். மேலும் இது இரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.

கோடையில் தினமும் தயிர் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்யும்.

நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கறுத்துப் போய் விடும். இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தை தணித்துக் கொள்ளலாம்.

No comments: