Do you skip breakfast to reduce weight......? - Go General

Education, General tips and Health tips

Wednesday 14 March 2018

Do you skip breakfast to reduce weight......?


காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?
இன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை பெரும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடை ஒரே நாளில் அதிகரிப்பது கிடையாது. எனவே, உடல் எடை சீக்கிரமே குறைந்துவிட வேண்டும் என எண்ணுவதும் தவறு. உடல் எடையை படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு கிலோ எடையை சீராகக் குறைத்துவருவது நல்லது. அதிக உடல் பருமன் இருப்பவர்கள் மட்டும் மாதம் 2.5-4 கிலோ எடையை குறைக்கலாம்.

காலை உணவின் மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது?

காலை உணவை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்ட முடியும். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. காலையில் சாப்பிடும் அதே உணவை மாலையில் சாப்பிட்டாலும் கூட, இந்த அளவிற்கு மெட்டபாலிசத்தை தூண்ட முடியாது.

பலர் காலை உணவை தவிர்த்துவிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவை அதிகமாக உட்கொண்டு விடுகிறார்கள். மாலை ஸ்நேக்ஸ் உடன் சேர்த்து காலை உணவை தவிர்த்தாலும் கூட அதிக உணவை சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

காலை உணவை தவிர்க்கும்போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரைட்டுகள், புரோட்டின், கொழுப்பு, வைட்டமின் போன்ற இன்னும் சில சத்துக்களை இழக்கக்கூடும்.

உடல் எடையை குறைக்க நினைத்தால், வெறும் வயிற்றில் ஓட்ட பயிற்சி செல்லலாம். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும்.

வாழைப்பழம் :
வாழைப்பழம் காலையில் சாப்பிடுவது நல்லது. இந்த வாழைப்பழத்தை ஓட்ஸ் உடன் சேர்ந்து சாப்பிடுவதால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.

ஆப்பிள் :
தினமும் காலையில் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிள் உங்களது இடுப்பில் உள்ள சதைகளை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் ஆப்பிள் உங்களது உடலுக்கு தேவையான சக்தியை தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

முட்டை :
காலையில் முட்டையை மட்டும் சாப்பிடுவதால், பசி எடுக்காது. ஆகையால் காலையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேக வைத்த முட்டைகளை மட்டும் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

No comments: