Foods that can help the digestive system to perform correctly.! - Go General

Education, General tips and Health tips

Wednesday 14 March 2018

Foods that can help the digestive system to perform correctly.!


செரிமானப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் உணவுகள்.!
நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், வயிற்று எரிச்சல், வயிற்று வலி, வாயுத் தொல்லை இந்த பிரச்சனைகள் எல்லாம் சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கான முக்கியமான மற்றும் அடிப்படை காரணம், செரிமானக் கோளாறு ஆகும். சில இயற்கை உணவுகளை நாம் சாப்பிடும் உணவோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். எனவே செரிமானத்திற்கு உதவும் இயற்கை உணவுகளையும் அவற்றின் மருத்துவப் பலன்களையும் பற்றி இங்கு காண்போம்.

ஓட்ஸ் :
ஓட்ஸில் வளமையான நார்ச்சத்து அடங்கியுள்ளதால் உடல் எடை குறைக்க மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடல் அமைப்பின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு தேவையான அரியக் கனிமங்களான ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலீனியம் போன்றவற்றையும் ஓட்ஸ் அளிக்கிறது.

வெந்நீர் :
சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் பசை உடலில் தங்குகிறது. இதனால் செரிமானம் தடைபடுகிறது. இதைத் தவிர்த்துவிட்டு சாப்பிட்டவுடன், சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
வெந்நீர் பருகுவதால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படும். அதனால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்று வலி, உப்புசத்தை தடுக்கிறது.

சீரகம் :
கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். இது இரைப்பையில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்குகிறது. மேலும் நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்கிறது.

பீட்ரூட் :
பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் மற்றும் உணவு சகிப்பின்மை போன்ற செரிமான பிரச்சனைகள் நீங்கும். பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உறுதி செய்யும். மேலும், பீட்ரூட் வயிற்றில் உண்டாகும் அசிடிட்டியை குறைக்கிறது.

புதினா :
புதினாவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிறு எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​

ஓமம் :
ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை அரை டம்ளராக ஆகும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை, மாலை பருகிவந்தால் வயிற்று மந்தம், வயிற்று வலி, வாயுபிடிப்பு போன்றப் பிரச்சனைகள் சரியாகும்.

No comments: