Gold offered in the temple as offerings to surprise you ... - Go General

Education, General tips and Health tips

Wednesday 7 March 2018

Gold offered in the temple as offerings to surprise you ...


ஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் !
நாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள். ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது. இங்குள்ள மகாலஷ்மி கோவிலில் தங்கம் பரிசாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை. காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர்.

வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போன்று குவித்து வைக்கப்பட்டிருக்கும். மற்ற கோவில்களில் சேரும் காணிக்கையை அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்காக செலவு செய்வார்கள்.

ஆனால், இக்கோவிலில் சேர்ந்த காணிக்கையான தங்கம் மற்றும் வெள்ளியினை தீபாவளி நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதுபோல் ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்க பிரசாதம் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை.

இங்கு பிரசாதமாக தரப்படும் தங்கத்தை மக்கள் இறைவனின் அருளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த தங்க பிரசாதத்தை யாரும் விற்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: