காலை எழுந்ததும் இதைப் பருகினால் உடலுக்கு நல்லது.!
நீராகாரங்கள்..!
நீராகாரங்கள்..!
காலை உணவுக்கு
முன்பாக நீராகாரங்கள் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை எழுந்தவுடன் காபி
குடிப்பதற்குப் பதிலாக நீராகாரங்கள் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பற்றி பார்ப்போம்.
தண்ணீர் : தினமும் காலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் 500 மில்லி அளவு தண்ணீர்
பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும்
வளர்ச்சிதை மாற்றத்தை 25மூ வரை வேகப்படுத்தும்.
எலுமிச்சை நீர் : தினமும் காலையில் தண்ணீரில் எலுமிச்சை நீரை
கலந்து குடித்து வந்தால் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். மேலும், குடல் இயக்கத்திற்கு
ஊக்கமளிக்கும்.
பூண்டு நீர் : வெறும் வயிற்றில் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து
குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். மேலும், கல்லீரல் நன்கு செயல்பட உதவும்.
மஞ்சள் நீர் : தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை
கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது குறையும்.
கிரீன் டீ : காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகி வர, உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
இஞ்சி டீ : காலையில் எழுந்ததும் இஞ்சி டீ குடித்து வர, புத்துணர்ச்சி
கிடைக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

No comments:
Post a Comment