What are the problems of vitamin deficiency - Go General

Education, General tips and Health tips

Friday 9 March 2018

What are the problems of vitamin deficiency


வைட்டமின் குறைபாட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்.!
நமது உடலுக்கு வைட்டமின்கள் அவசியமா?
வைட்டமின் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருளாகும். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். மேலும் செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு.

, பி, சி, டி, கே போன்ற ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக உள்ளது. இந்த வைட்டமின்களில் குறைபாடு ஏற்படும்போது, நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றன. இப்பொழுது எந்த வைட்டமின் அளவு குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

வைட்டமின் ஏ, டி ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், உடல் முழுவதும் பருக்கள் போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்க, உலர்ந்த பழங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், பாதம் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி சத்துக் குறைபாடு இருந்தால் ஈறுகளில் இரத்தம் வழிதல், செரிமானக் கோளாறு, மூக்கில் இரத்தம் கசிதல், குணமாகாத புண்கள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தினமும் எலுமிச்சம் பழச்சாறு பருக வேண்டும்.

வைட்டமின் பி, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் உதட்டு வெடிப்பு மாதிரியான பிரச்சனைகள் தோன்றலாம். இக்குறைபாட்டைத் தவிர்க்க, முட்டை, மீன், வேர்க்கடலை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி, தாது உப்புகள், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இருந்தால் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இக்குறைபாடுகளைப் போக்க பாதாம், வாழைப்பழம், ஆப்பிள், கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் ஏ, கே, , டி, பி7 போன்ற சத்துகள் குறைவாக இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். இதற்கு உலர்ந்த பழங்கள், வாழைப்பழம், காளான், பூசணி விதைகள் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் பி, பி12, பி9, பி6 போன்ற சத்துகளின் குறைபாடு இருந்தால் உடலில் அரிப்பு, உணர்ச்சியின்மை போன்ற மாற்றங்கள் ஏற்படும். இதற்கு மீன், முட்டை, பருப்பு உணவுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

No comments: