From then until today the education system of the Tamils - Go General

Education, General tips and Health tips

Wednesday, 7 March 2018

From then until today the education system of the Tamils


தமிழர்களின் கல்விமுறை அன்றிலிருந்து இன்று வரை !
தமிழர்களின் கல்வி ! 

அக்காலக் கல்வி முறை :

அக்காலக் கல்வி முறை இக்காலம் போன்று இல்லை. மாணவர்கள், ஆசிரியர் இல்லத்தில் தங்கிக் கல்வி கற்றனர். படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றுமே முதன்மையானவை. ஆசிரியருக்கு தேவையான உதவிகள் செய்தும் பயின்றனர்.

ஆசிரியர் :

ஆசு + இரியர் ஸ்ரீ ஆசிரியர். அதாவது மாணவர்களின் மனதிலுள்ள அறியாமையாகிய குற்றத்தை போக்குபவர் என்பது பொருளாகும்.

மாணாக்கர் :

மாண் + ஆக்கர் ஸ்ரீ மாணாக்கர். ஆசிரியரிடம் பயிலும் போதே சிறந்த பண்புகளைத் தம்மிடம் உண்டாக்கிக் கொள்பவர் என்பது பொருளாகும்.

கற்பித்தல் :

மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போது காலம், இடம் முதலியவற்றை அறிந்து நன்கமர்ந்து பாடத்தின் பொருளைப் பற்றி ஆய்ந்து, விருப்பத்துடன் முகம் மலர்ந்து, பாடம் கேட்கும் மாணவர்களுக்கேற்ப மனதில் பதியும்படி மாறுபாடில்லா மனநிலையோடு கற்பித்தனர்.

மாணாக்கர் பாடங்கேட்டல் :

பாடம் கேட்கும் மாணவர்கள் நேரம் தவறாது சரியான நேரத்தில் ஆசிரியரிடம் சென்று ஆசிரியருக்கு பணிவிடை செய்வதில் வெறுப்படையாது, அவரது குணமறிந்து பழகி, குறிப்பறிந்து நடந்து கொண்டனர்.
ஆசிரியர் அமரச் சொன்னபடி அமர்ந்து, கேள்வி கேட்டால் விடை சொல்லி, அடக்கமாக இருந்து, ஆசிரியர் சொல்வதைச் செவி வாயிலாகக் கேட்டு, நெஞ்சகத்திருத்தி, ஆசிரியர் சொன்ன நற்கருத்துகளை மறவாமல் மனதில் பதிய வைத்துக்கொண்டு, ஆசிரியர் போ என்று சொன்னபின் போதல் முறையாக இருந்தது.

கற்றவருக்கு பட்டம் :

இன்று உள்ளது போல் படித்ததற்கு சான்று, பட்டம் வழங்கும் முறை அன்றில்லை. ஆனால், எந்த ஆசிரியரிடம் பாடம் கேட்டீர் என்று கேட்பதுண்டு. அவற்றைக் கொண்டு அவரது அறிவுத்திறன் கணிக்கப்பெறும். முதற்காலப் பாடங்கேட்கும் முறை, செவி வழிக்கேட்டு, மனதில் நிறுத்தி கொள்வதாகவே இருந்தது. ஆண்களும், பெண்களும் அன்று சமவாய்ப்புகளுடன் கல்வி கற்றனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிரம்பவுள்ளது.


இன்றைய ஆசிரியர், மாணாக்கர் : 

இக்காலத்து ஆசிரியர், மாணாக்கர் நிலை முற்றிலும் மாறுபட்டதாகும். ஆசிரியர் மாணாக்கர் என்கிற அன்புப் பிணைப்பு இன்றி உரையாடுகின்றனர். ஆசிரியருக்கு அடங்கி, அவர் வழிபற்றி பயிலும் நிலைமாறி, ஆசிரியரை மாணவர்கள் அதிகாரம் செய்யும் நிலையே உருவாகி வருவது வருந்துதற்குரியது.

No comments: