Foods are harmful to the body...! It is dangerous for snacks - Go General

Education, General tips and Health tips

Wednesday, 7 March 2018

Foods are harmful to the body...! It is dangerous for snacks


உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்..! ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனி !!
வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதைச் சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பீட்ஸா, பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகள், கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு காண்போம்.

நொறுக்கு தீனியின் தீமைகள் :
பீட்ஸா, பர்கர், ஐஸ்கிரீம், எண்ணெயில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ் இவையெல்லாம் நொறுக்கு தீனிகளாகும். இது தான் இன்றைய இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடாகும். ஒவ்வொரு உணவுக்கும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமென்று விதிமுறை இருக்கின்றது.

நமது ஆரோக்கியத்திற்கு மைதா நல்லதல்ல. ஏனெனில், இது நமது உடலுக்கு சக்தியைத் தராமல் செரிமானம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்கிறது. எனவே முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது.

நொறுக்கு தீனி பொருட்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருப்பதற்கு சேர்க்கும் பொருட்களில் அமோனியாவும் கலந்து இருப்பதால் இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது.

வட இந்திய உணவுகளை விற்கிற ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது என்று தெரியாது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. இதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

சாலையோர உணவு கடைகளில் வேக வைத்த உருளைக்கிழங்குகளையும், நறுக்கிய வெங்காயத்தையும் திறந்த வெளியில் வைத்திருப்பார்கள். இதனால் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. இதனால் வாந்தி, பேதி போன்றப் பிரச்சனைகள் ஏற்படும்.

நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் என தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். எனவே உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக செரிமானம் செய்ய பித்த நீர், கணைய நீர் தேவை. இது குறைந்தால் செரிமானம் ஆகாமல் இருக்கும். இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் உள்ளது.

இல்லையென்றால் செரிமானம், வாயுக்கோளாறு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்றுநோய், மூலம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, மாரடைப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. 

No comments: