இந்த ஆறு வகை உணவு மிக முக்கியம் !
எத்தனை வகையில்
உணவுகள் தயாரித்தாலும், அது அறுசுவைக்குள்தான் இருக்கும் என்பது
முன்னோர்களின் கணிப்பு. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு
அறியக்கூடிய சுவைகள் ஆறுவகை. அதாவது,
துவர்ப்பு
இனிப்பு
புளிப்பு
கார்ப்பு
கசப்பு
உவர்ப்பு
இனிப்பு
புளிப்பு
கார்ப்பு
கசப்பு
உவர்ப்பு
துவர்ப்பு :
குளிர்ச்சி தன்மை
கொண்ட துவர்ப்பு சுவை, உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது.
உடலில் கபம், பித்தம், ரத்தம் ஆகியவற்றில்
ஏற்படும் பிரச்சனை அழிக்க உதவுகிறது. இது ஜீரணம் அடைவது மிக கடினம்.
இந்த சுவை தோலின்
நிறத்தை சரிசெய்து, உடலின் வறட்சியை போக்கி, புண்களை ஆற்றும் குணம் கொண்டது. ஆனால் இந்த
சுவையை அதிகம் எடுத்துக் கொண்டால் அது நாக்கு வறட்சி, வயிற்று பொருமல், கால்கள் தடித்து
அசைவில்லாமல் இருப்பது, உடல் இளைப்பு, ஆண்மை குறைவு ஆகிய பாதிப்புகளை உண்டாக்கும்.
இனிப்பு :
இனிப்பு, மனத்திற்கும்
உடலுக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. இனிப்பு அதிகமானால் எடை கூடும். உடல் தளரும்.
சோர்வும், தூக்கமும் உண்டாகும்.
இனிப்பு தசையை
வளர்க்கின்றது.
புளிப்பு :
புளிப்பு, பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை
வலுப்பெறச் செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.
உணவின் சுவையை
அதிகரிக்கும் சுவையிது. இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை
உண்டாக்கும். உடல் தளரும்.
கார்ப்பு :
இந்த சுவை நுனி
நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால்
வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.
காரம் மிகுந்த
உணவுகள் சாப்பிடுவதால் அது நம் உடலில் எதிர்ப்பு சக்தி மற்றும் ஜீரண சக்தியை
அதிகரிக்க செய்து, கபத்தை குறைத்து, புண்களை ஆற்றும்.
மேலும் இது வீக்கம், உடல் பருமன், கிருமி நோய், தொண்டை நோய், தோல் நோய் ஆகியவற்றை
தணிக்கும் குணம் கொண்டது.
பசியைத் தூண்டும்.
செரிமானத்தைத் தூண்டும். எலும்பினை வளர்க்கின்றது. ரத்தத்தை தூய்மையாக்கும்.
கசப்பு :
கசப்பு, உடல்நலத்திற்கு
மிகவும் ஆரோக்கியமானது. இந்த கசப்பு சுவையானது நாக்கின் ருசியின்மையை போக்கி, உடலில் உள்ள
டாக்ஸின்கள் மற்றும் கிருமிகளை அழிக்க உதவுகிறது.
பெரும்பாலும் கசப்பு
வெறுக்கக்கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே.
இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும்.
ஆனால் இந்த கசப்பு
சுவையை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல், வாதம், வரட்டு தன்மை ஆகிய
பிரச்சனைகளை உண்டாக்கும்.
தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல்
ஆகியவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளை பலப்படுத்துகின்றது.
உவர்ப்பு :
உவர்ப்பு, அனைவரும்
விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாத சுவை. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற
சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும்.
அன்றாடம்
பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது.

No comments:
Post a Comment