ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?
நீண்ட நாள்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான வழிமுறைகளை
பின்பற்றினால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தினமும் ஒரு டம்ளர்
மாதுளை பழச்சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை எனப்
பல பிரச்சனைகளை போக்கலாம்.
ஆப்பிள் தோலில்
பெக்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால், ஆப்பிளை தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின்
நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
பூண்டை அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். மேலும், இது வெள்ளை அணுக்களை
அதிகம் உற்பத்தி செய்வதோடு, புற்றுநோய் உருவாக்கும் செல்களை உருவாகாமலும்
தடுக்கிறது.
தினமும் உணவில்
தர்பூசணி துண்டுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மனநலக் கோளாறு மற்றும் மூளை
நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் மன அழுத்தம் குறையும். வைட்டமின் பி6 தர்பூசணியில் அதிகமாக
உள்ளது.
பச்சைப் பயிறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், இளநீர் போன்றவை
உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கிறது.
உடலில் சிவப்பணு
உற்பத்தியை அதிகரிக்க புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை
போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி உணவில்
சுண்டைக்காயைச் சேர்த்தால் நாக்குப்பூச்சி தொல்லை, வயிற்றுப்பூச்சி தொல்லை போன்றவை குணமாகும்.
வாரம் மூன்று முறை
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தணியும்.
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் உணவு பொருட்கள் ஆகும்.

No comments:
Post a Comment