இதனை தினந்தோறும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? - Go General

Education, General tips and Health tips

Saturday, 3 March 2018

இதனை தினந்தோறும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


இதனை தினந்தோறும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பாதாமின் நன்மைகள்..!

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு போன்ற சத்துக்கள் உள்ளது. தினமும் இரவில் பனிரெண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை அரைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும்.
அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகளை உண்டாக்கும். 

மூளையை பலப்படுத்தும் :

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளம் வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும்.

நரம்பு தளர்ச்சி :

பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம் :

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

எடை குறைய :

பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

இரத்த அழுத்தம் :

பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் :

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.

சீரான இரத்த ஓட்டம் :

மக்னீசியம் பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

நீரிழிவு :

பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments: