சரித்திரத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்...! - (30.01.2018)
·
இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
·
தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதியை
இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் மறைந்த
இவருக்கு இன்று 70வது நினைவு தினமாகும். தியாகிகளின் வீரச் செயல்களை
நினைவுபடுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை
செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சி.சுப்பிரமணியம்
·
சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர்
சி.சுப்பிரமணியம் 1910ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம்
கிராமத்தில் பிறந்தார்.
·
இவர் நாடு விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில்
பங்கேற்றார். ராஜாஜி இவரது அரசியல் குரு.
·
1952-1962 காலக்கட்டங்களில் மாநில அரசில் கல்வி, சட்டம், நிதி அமைச்சர்
மத்திய எஃகு, சுரங்கத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
·
1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்திக்கு
ஆதரவாக நின்று, கட்சித் தலைவரானார். 1972-ல் கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார். 1990-ல் மகாராஷ்டிர
ஆளுநராகப் பதவியேற்றார்.
·
சென்னை தேசிய வேளாண் அறக்கட்டளை, திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி
நிறுவனம் என பொதுநலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். நாட்டுக்கு இவர் ஆற்றிய
பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவருக்கு 1998-ல் 'பாரத ரத்னா"
விருது வழங்கப்பட்டது.
·
இந்திய விவசாய வளர்ச்சிக்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய
இவர் தனது 90வது வயதில் (2000) மறைந்தார்.
ராமலிங்க அடிகள்
இன்று இவரின் 144வது நினைவு தினம்...!!
·
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்த வள்ளலார் ராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரம்
அடுத்த மருதூரில் பிறந்தார்.
·
முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென
சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.
·
பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு
துடித்தார். 'ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்" என எடுத்துக்
கூறினார்.
·
'சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார்.
மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். 'கடவுள் ஒருவரே, உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார
வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு
உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்" என உபதேசித்தார்.
·
1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில்
பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.
·
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணைமிக்க ராமலிங்க
சுவாமிகள் 50-வது வயதில் (1874) மறைந்தார்.



No comments:
Post a Comment