உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய உணவுகள் ! - Go General

Education, General tips and Health tips

Tuesday, 30 January 2018

உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய உணவுகள் !


உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய 

உணவுகள் !



·         உடல் எடை இன்று பெரும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க பல வழிமுறைகளை பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.

·         உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று, உணவை தவிர்த்து கடுமையான டயட்டை மேற்கொள்வது தவறு. உடல் எடையை ஆரோக்கியமான டயட் மூலம் தான் குறைக்க வேண்டும்.

·         கீரைகள், நட்ஸ், பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் என சமச்சீரான உணவு உட்கொள்வது அவசியம்.

காலை :

·         காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது. காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு - மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

·         காலையில் அதிகளவு உண்ணுவதோ, உணவை அறவே தவிர்ப்பதோ என்பது கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.


மதியம் : 

·         மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இரவு :

·         இரவு உணவாக சப்பாத்தி, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

·         உணவை மூன்று வேளைகளாகச் சாப்பிடுவதற்கு பதிலாக, ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிட வேண்டும்.

·         பொங்கல், பூரி, பரோட்டா, மசால் தோசை, பிரியாணி, எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக அளவு மசாலா சேர்க்கப்பட்ட அசைவ உணவுகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக்கூடாது.


·         சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இடையிடையில் தண்ணீர், பானங்கள், ஜூஸ் போன்றவற்றை அருந்தக்கூடாது.

·         உணவு சாப்பிட்ட பின்னர், அரை மணி நேரம் கழித்துத் தண்ணீர் அருந்த வேண்டும்.


·         சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், செரிமானம் தாமதமாகும். இதனால், இரைப்பை சற்றே பெரிதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments: