இன்றைய வரலாற்று நிகழ்வுகள் ஓர் பார்வை..! - (29.01.2018) - Go General

Education, General tips and Health tips

Monday, 29 January 2018

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் ஓர் பார்வை..! - (29.01.2018)


இன்றைய வரலாற்று நிகழ்வுகள் ஓர் 

பார்வை..! - (29.01.2018)


இந்திய செய்தித்தாள் தினம்




·         இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

·         இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கீ’ஸ் பெங்கால் கெஜெட் (Hicky’s Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hickey) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.



·         இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்


·         இந்திய விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore) 1970ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சல்மேரில் பிறந்தார்.

·         இவர் இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் ஏதென்ஸில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

·         இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும், மேலும் இதுதான் 2004ஆம் ஆண்டின் ஒரே பதக்கமாகும்.


·         இவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

·         இவர் இந்தியத் தரைப்படையில் பணியாற்றி 2013ல் ஓய்வு பெற்றார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


·         விளையாட்டு துறை, அரசியல் என இரு துறைகளிலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இவர் தன்னுடைய 48வது வயதை நிறைவு செய்கிறார்.

முக்கிய நிகழ்வுகள்

·         1886ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஜெர்மனியரான கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான (Motorcar) காப்புரிமம் பெற்றார்.

·         1998ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி மறைந்தார்.

No comments: