ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன
செய்ய வேண்டும்?
கணினியில் உள்ள வசதிகள் அனைத்தையும் கொண்டு, கைக்கு அடக்கமாக
பயன்படுத்த உருவாக்கப்பட்டது தான் ஸ்மார்ட்போன். கணினிக்கு இயங்குதளங்கள் இருப்பதைப்
போன்று மொபைல் போன்களுக்கென கூகுள் உருவாக்கிய புது வகையான ஒரு இயங்குதளமே
ஆன்ட்ராய்ட் ஆகும்.
ஆன்ட்ராய்ட் போனின் சிறப்புகள் :
·
நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும்
வசதி, ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய
அனைத்து SMS-களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி, BROWSER மற்றும்
YOU TUBE வீடியோக்கள் பார்க்க FLASH வசதி, குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி, ஸ்கிரீன் ஷாட்
எடுக்கும் வசதி என பல அம்சங்களை கொண்டதுதான் இந்த ஸ்மார்ட்போன்.
·
இவ்வளவு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் ஆனது தண்ணீரில் விழுந்து
விட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்து
கொள்வோம்.
செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை :
·
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பல வழிமுறைகளில் மிக
எளிமையாக சரி செய்ய முடியும். தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில்
விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
·
நம் கை தவறி தண்ணீருக்குள் விழும் செல்போனை 5 நொடிக்குள் எடுக்க
முயற்சி செய்ய வேண்டும்.
·
முதலில், மொபைல் போனில் எதையெல்லாம் பிரித்து எடுத்து
வைக்க முடியுமோ, அவற்றையெல்லாம் பிரித்து எடுத்து விடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை
இதில் அடங்கும்.
·
அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும்
என்று நினைக்கிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ
பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுத்து போனை முழுவதுமாக உலரச்
செய்ய வேண்டும்.
·
அரிசிக்குள் புதைத்து வைத்தால் ஈரம் உறிஞ்சப்படும். இல்லையேல்
ஈரம் உறிஞ்சும் பொருட்களைக் கொண்டு உலர்த்த வேண்டும். முக்கியமாக, பேட்டரி வைத்திடும்
இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
·
நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். நேரடியாக சூரிய
ஒளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
·
போனில் உள்ள ஈரத்தை முழுமையாக நீங்கிவிட்டப்பிறகு, பேட்டரி, சிம் ஆகியவற்றைப்
பொருத்தி போனை ஆன் செய்ய வேண்டும்.
·
போன் ஆன் ஆகவில்லையெனில், உடனடியாக போனை திரும்பவும் பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட்
ஆகியவற்றை தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
·
மொபைல் போன் சரி செய்திடும் சர்வீஸ் சென்டருக்கு
எடுத்துச்சென்று நீரில் விழுந்ததையும், நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் தெளிவாக கூறி சரி
செய்யவும்.

No comments:
Post a Comment