சந்திர கிரகணம் பற்றிய சிறப்புத் தகவல்கள் !!
·
ஹேவிளம்பி ஆண்டு தை மாதம் 18-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம். இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு
வெளியே வரக்கூடாது.
·
சூரியன், பூமி, சந்திரன்
மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன்
மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன்
மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது.
·
பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும்
நடக்கும்.
·
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின்
பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது
சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
·
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால்
பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக
ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு
கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது
கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
·
கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே
நேரத்தில் தென்படாது. மாறாக வௌ;வேறு நேரங்களிலேயே
தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதைக் காணலாம்.
சந்திர கிரகணம் பற்றிய புராணக் கதை :
·
சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால்
அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை
முடமாக்க நினைக்கிறார்.
·
ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு
அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.
·
இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன்
இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும் என்பது
நம்பிக்கையாகும். மேலும், இறைவன் அருளும்
கிடைக்கும்.

No comments:
Post a Comment