வரலாற்றில் இன்று நிகழ்ந்தவைகள்......! - (27.01.2018) - Go General

Education, General tips and Health tips

Saturday, 27 January 2018

வரலாற்றில் இன்று நிகழ்ந்தவைகள்......! - (27.01.2018)

வரலாற்றில் இன்று நிகழ்ந்தவைகள்......! - 

(27.01.2018)


சர்வதேச படுகொலை நினைவு தினம்

·         இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.

·         சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது. 


·         இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

ஆர்.வெங்கட்ராமன்



இன்று இவரின் 9வது நினைவு தினம்....!!

·         சுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். 

·         இவர் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்" (1942) ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். பின் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கினார். 

·         மேலும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டார். 1982ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார்.

·         இவர் தாமரைப் பட்டயம் போன்ற விருதுகளையும், மேலும் இவர் எழுதிய சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம் என்ற நூலுக்கு ரஷ்யாவின் “சோவியத் லேண்ட்" என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

·         உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் தனது 98வது வயதில் (2009) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்

·         1756ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இசைமேதை மொசார்ட், ஆஸ்திரேலியாவில் பிறந்தார். 


·         1880ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

No comments: