ஆரோக்கியமான உடல்நலத்திற்கு ஏற்ற
உணவுகள் !
உடல்நலத்தை காக்கும் உணவுகள் !
·
உடல்நலத்தை பாதுகாப்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய
காலகட்டத்தில் வேளைப்பளு காரணமாக பலர் உடல்நலத்தை சரிவர பாதுகாப்பது இல்லை.
·
உடலை சரியான முறையில் பாதுகாத்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ
முடியும். இங்கு உடல்நலத்தை பாதுகாக்கும் சில உணவுப்பழக்கங்களை பற்றி பார்ப்போம்.
·
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல
பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
·
தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மனஅழுத்தம், பயம் போன்ற
பாதிப்புகளை தகர்க்கும் வைட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
·
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட
வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்கும்.
·
பூண்டு உட்கொள்வதால் உடலில் நோய்எதிர்ப்புச் சக்தி வெகுவாக
அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள்
உருவாகாமலும் தடுக்கும்.
·
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும்.
·
ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
·
சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு
வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
·
பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒரு முறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள்.
கண்களுக்கு நல்லது.
·
உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி
வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல்
ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
·
தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு
வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
·
சாப்பிட்டதும் தூங்கக்கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச்
சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை
இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.
·
கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில்
இருக்கிறது.
·
கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள
வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
·
அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில் மினரல்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து
அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில்
சேர்த்து கொண்டால், பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.


No comments:
Post a Comment