ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? - Go General

Education, General tips and Health tips

Tuesday, 20 February 2018

ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?


ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?


ஒற்றைத் தலைவலி..!
தலைவலியில் சாதாரண தலைவலி, ஒற்றைத் தலைவலி, கொத்துத் தலைவலி, டென்ஷன் தலைவலி என பல விதம் உண்டு. இவற்றுள் ஒற்றைத் தலைவலிதான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எது ஒற்றைத் தலைவலி? இளம் வயதில் ஏற்படும் தலைவலி இது. சிறுவர்களுக்கு 10 வயதிலும், சிறுமிகளுக்கு 15 வயதிலும் இது தொடங்குகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு, அதிகம் தொல்லை கொடுக்கும். ஆண்களுக்கு 50 வயதைக் கடந்ததும் இது ஆரம்பிக்கும்.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் : 
முதல் கட்டத்தில் தலைவலி வருவதற்கு முன்பு உள்ளுணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக லேசாக தூக்கம் வருவதுபோல் இருக்கும். கொட்டாவி வரும். உடல் களைப்பாக இருக்கும். காரணம் இல்லாமல் எரிச்சலும் கோபமும் வரும். குமட்டலும் வாந்தியும் வரும். ஏதாவது ஒரு உணவுப் பொருளுக்கு ஏங்குவது போல இருக்கும் அடிக்கடி சிறுநீர் கழியும். தண்ணீர் தாகம் எடுக்கும்.

இரண்டாம் கட்டத்துக்கு 'ஆரா" என்று பெயர். இதில் கண்களுக்கு முன்னே ஒளி வட்டம் தோன்றுவது போலவும் அலை அலையாகத் தோன்றுவது போலவும் காணப்படும். சிலருக்குப் பார்வை குறைவது, இன்னும் சிலருக்கு நாவில் சுவை குறைவது, கை கால்களில் மதமதப்பு ஏற்படுவது, வித்தியாசமான வாசனை வருவது, காதில் வித்தியாசமான ஒலி கேட்பது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

மூன்றாம் கட்டத்தில் தலைவலி ஆரம்பிக்கும். இது தலையின் முன்பக்கத்தில் கண்ணுக்குப் பின்புறம் ஒரு பக்கமாகத் தோன்றி, மறுபக்கத்துக்குப் பரவும். 'விண் விண்"ணென்று வலிக்கும். வாந்தி வரும். அருகில் யார் இருந்தாலும் அவர்களுடன் பேசுவதுகூட எரிச்சலாகவும் கோபம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆதலால் இருட்டான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கத் தோன்றும்.

இறுதிக் கட்டத்தில் தலைவலி குறைந்து கழுத்துக்கு வலி பரவியிருக்கும். உடலிலிருந்து சக்தி முழுவதும் வெளியேறிவிட்டதுபோல் இருக்கும். முக்கியமாக சிந்திக்கும் ஆற்றல் குறைந்திருக்கும். மனக்குழப்பம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

ஒற்றைத் தலைவலி வரக் காரணங்கள் : 
அதிக மன அழுத்தம், சரியான உறக்கம் இல்லாதது, வெயிலில் அதிகம் அலைவது, கண்ணில் படும் அதிக வெளிச்சம், காதில் கேட்கும் அதிக இரைச்சல், ஒழுங்காக சாப்பிடாமல் பசியுடன் வேலை பார்ப்பது போன்றவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகிற முக்கியமான காரணிகள். 

சிலருக்கு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதும், குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போதும், ஒற்றைத் தலைவலி வரக்கூடும். தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும்போது, ஒற்றைத் தலைவலி வருவதை இங்கு நினைவு கூறலாம். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் இது அதிகம் தொல்லை கொடுப்பதுண்டு. வாசனை திரவியங்கள், பூ, வாசனை பெட்ரோல் மற்றும் டீசல் புகை ஆகியவை இத்தலைவலியைத் தூண்டும்.

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சைகள் : 
மன அழுத்தம்தான் காரணம் என்றால் அதைக் குறைப்பதற்கான யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர், அக்குபிரஷர், உடற்பயிற்சிகள் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தருவதோடு அதை வரவிடாமல் தடுக்கவும் உதவும்.

No comments: