பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்றுவது சரியா?
வாழ்வில் அனைத்து வளங்களையும் தரும் வழிபாடு !!
பொதுவாக பரிகாரப்
பூஜை செய்வதற்காக பலரும் நவகிரக கோவில்களுக்குச்
செல்வார்கள். அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளைப் பற்றி இங்கு காண்போம்.
பரிகாரப் பூஜை
செய்பவர்கள் முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது.
கோவிலுக்கு செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ உறவினர்களின் வீடு மற்றும்
பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம்.
புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு
முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்க்க வேண்டும். மற்ற
விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. யாரிடமும் கடன் வாங்கி கோவிலுக்குச்
செல்லக்கூடாது. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது
நல்லது.
கோவில் நுழைவாயிலில்
கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். தலையில் நீரைத்
தெளிக்கக்கூடாது. கோவிலுக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் குலதெய்வத்தை
வழிபடலாம். பரிகாரங்கள் அனைத்தையும் நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.
பொழுதுபோவதற்காக கோவிலுக்குச் செல்லக்கூடாது.
உங்களின்
சக்திக்கேற்றப்படி பூஜை செய்ய வேண்டும். தலங்களுக்குச் செல்வதற்கு முன் ஒரு நாளும், பின் ஒரு நாளும்
இறந்தவர் வீட்டிற்குச் செல்லக்கூடாது. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர்
அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
கோவில்களில்
செல்போன்களைத் தவிர்ப்பது நல்லது. சிதறுகாயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி
(இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்கக்கூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.
மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்கக்கூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.
பால்கோவா, அவல் பொரி, கடலை இவற்றையும்
நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
ஒரு பிரதட்சிணம்
முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும்.
கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது. பிற தீபங்களிலிருந்து
உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெயை பிற விளக்குகளில் ஊற்ற
வேண்டாம்.
பூஜை
செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப்
பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜைப்பொருட்களை
அங்கேயே கொடுத்து விடுவது நல்லது.
சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், மாம்பழம், எலுமிச்சை
போன்றவற்றை இறைவனுக்கு படைக்கலாம். தாமரைப்பூ, சம்பங்கி, துளசி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, அருகம்புல், வில்வப் பூ போன்ற
பூவகைகளால் இறைவனை பூஜிக்கலாம்.
வேகமாக பிரதட்சிணம்
வராமல் பொறுமையாக வருவது நல்லது. ஒவ்வொரு கோவிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள
தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய
பஞ்சபூதங்களுக்காக ஐந்து விளக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
தோஷ நிவர்த்திப்
பூஜைகளை 30 வயதிற்குள் செய்துவிடுங்கள். முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன
அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

No comments:
Post a Comment