Today History...! 31.01.2018 - Go General

Education, General tips and Health tips

Wednesday, 31 January 2018

Today History...! 31.01.2018


நகைச்சுவை நாயகன் நினைவு தினம் :

 வரலாற்றில் இன்று...! 31.01.2018

நாகேஷ்



இன்று இவரின் 9வது நினைவு தினம்...!!


·         நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகளை படைத்த பெருமைக்குரியவரான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் பிறந்தார்.

·         இவர் 1958ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை (1963) திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.


·         இவருக்கு 1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது.

·         தமிழ் திரையுலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்த இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.


முக்கிய நிகழ்வுகள்

·         1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான ( Satellite ) எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.

·         1946ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 


·         1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரகவி என்ற சிறப்புப்பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே (தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே) பிறந்தார்.

·         1961ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாசாவின் மெர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி (Chimpanzee) ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

இன்றைய பொன்மொழி

'அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்" - கில்ப்பின்.

No comments: