Moon eclipse-January 2018 lunar eclipse - Go General

Education, General tips and Health tips

Wednesday, 31 January 2018

Moon eclipse-January 2018 lunar eclipse


சந்திர கிரகணம் - சிறப்புப் பார்வை !



·         இன்று சந்திர கிரகணம் மட்டுமல்ல... சூப்பர் மூன் (பூமிக்கு அருகில் நிலவு வரும் நிகழ்வு), ப்ளு மூன் (ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி) என்று மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் ஏற்படுகிறது.

·         சந்திர கிரகணம், ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி, சூப்பர் மூன் என மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடந்தது மார்ச் 31, 1866ம் ஆண்டு. அதன்பின் 152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜனவரி 31, 2018ம் ஆண்டு சந்திர கிரகணம், ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி, சூப்பர் மூன் என மூன்று நிகழ்வுகள் நிகழ்கிறது.


நீல நிலா :

·         ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றும் போது நிலாவின் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது வாயு மண்டலத்தில் எரிமலைப் புகையும் தூசும் அதிகம் இருந்தால் நிலாவின் நிறம் நீலமாகத் தெரியும்.

·         2018ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இது. இன்று (ஜனவரி 31) முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

பிளட் மூன் :

சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது என்ற போதிலும் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் சூரிய ஒளியானது, நிலவின் மேல்படும். அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலா சிவப்பாகவும் தோன்றும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படும்.

சந்திர கிரகணம் தெரியும் நாடுகள் :

·         முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்களால் இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம்.

·         முழு சந்திர கிரகணம் உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இன்று தெரியும்.

கிரகணம் தெரியும் நேரம் :

·         நிகழும் ஹேவிளம்பி வருடம் இன்று தை மாதம் 18ம் நாளான புதன்கிழமை (31.01.2018) அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் உண்டாகிறது.

·         ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்பது ராகுவின் வசம் மனக்காரகனான சந்திரன் இருப்பதாகும்.


ஆரம்பம் - மாலை 6.18.

மத்யமம் - இரவு 7.57.

முடிவு - இரவு 8.41.


கிரகணம் தொடங்கும் முன் செய்ய வேண்டியவை :

·         கிரகணம் ஆரம்பிக்கும் இரண்டு மணி நேரத்திற்கு எவ்வித போஜனம் உண்ணல் கூடாது.

·         கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.

·         கிரகண காலங்களில் ஆலய தரிசனத்தை தவிர்க்க வேண்டும்.


·         கிரகண காலத்திற்கு முன் செய்த உணவு பொருள்கள் இருப்பின் அந்த உணவில் தர்ப்பை புல்களை (அருகம்புல்) இடுதல் வேண்டும்.

·         வீட்டில் உள்ள குடிக்கும் தண்ணீரில் தர்ப்பை புல்லை இடுதல் வேண்டும்.

கிரகணம் முடிந்த பின்பு செய்ய வேண்டியவை :

·         கிரகணம் முடிந்த பின்பு ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.

·         கிரகணம் முடிந்த பின்பு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

·         கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து புதிய உணவை சமைத்து உண்ண வேண்டும்

·         மீதமுள்ள உணவில் உள்ள தர்ப்பை புல்லை எடுத்து விட்டு இறைவனை எண்ணி போஜனம் உண்ணலாம். மத்தியமான பலனே கிட்டும்.

No comments: