பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்களின் கவனத்திற்கு……….!! - Go General

Education, General tips and Health tips

Saturday, 3 March 2018

பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்களின் கவனத்திற்கு……….!!


பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்களின்

 கவனத்திற்கு……….!!

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலானது முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை 'ஞானப் பழம் நீ" என அழைத்ததால், 'பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே 'பழனி" ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. 

முருகன் சிலையின் சிறப்பு :

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

தண்டாயுதபாணி பெயர் காரணம் :

இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரவுப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். 
இடும்பன், அவரை இறங்கும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையின் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் 'தண்டாயுதபாணி" என பெயர் பெற்றார்.

பழனி மலைக்கோவிலில் நடைபெறும் பூஜை - நேரம் - அலங்காரம் :

விளா பூஜை - காலை 6.40 - சன்யாசி அலங்காரம்
சிறுகாலசந்தி - காலை 8.00 - பாலசுப்ரமணியர் அலங்காரம்
காலசந்தி - காலை 9.00 - பாலசுப்ரமணியர் அலங்காரம்
உச்சிகாலம் - பகல் 12.00 - வைதிகாள் அலங்காரம்
சாயரட்சை பூஜை - மாலை 5.30 - இராஜ அலங்காரம்
அர்த்தஜாம பூஜை - இரவு 8.00 - புஷ்ப அலங்காரம்

கோவிலின் சிறப்பு :

இந்த முருகன் கோவிலில்தான் தமிழகத்தில் பக்தர்கள் முதன்முதலாக வேண்டுதல்கள் நிமித்தமாக அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் வந்தது.
குடும்பத்தில் சந்தோஷம் பெருக, தொழில் செழிக்க, செல்வம் பெருக என பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற முருகனை வேண்டிக் கொள்கின்றனர்.

No comments: