Let's eat eggs in the summer.....? - Go General

Education, General tips and Health tips

Monday 19 March 2018

Let's eat eggs in the summer.....?


கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாக எதுவும் வர முடியாது. முட்டை சகல வல்லமை படைத்த ஓர் உணவாகும்.

மிகக் குறைந்த விலையில் அதிகப் புரதச்சத்து கொண்ட உணவு முட்டை. பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுக்க இருக்கும் மக்கள் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

முட்டையிலுள்ள வெள்ளை கரு, மஞ்சள் கரு உட்பட அனைத்து பகுதிகளுமே ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரங்களாக உள்ளன.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிடலாமா?

முட்டையில் கனிமச்சத்து, வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் சத்துகள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது.

கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

முட்டை உடலில் உள்ள ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை தடுக்கிறது. கோடையில் ஒரு நாளைக்கு 1-2 முட்டையை சாப்பிடலாம். அதற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

முட்டையை குறைவான எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

கோடைகாலத்தில் அளவுக்கும் அதிகமாக முட்டையை எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கோடைகாலத்தில் முட்டையை நன்கு வேகவைத்துச் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. கோடைகாலத்தில் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லதாகும்.

No comments: