எந்த ராசிக்காரர்களுக்கு துணையுடன் அன்பு அதிகரிக்கும் !! - Go General

Education, General tips and Health tips

Tuesday, 13 February 2018

எந்த ராசிக்காரர்களுக்கு துணையுடன் அன்பு அதிகரிக்கும் !!


எந்த ராசிக்காரர்களுக்கு துணையுடன் அன்பு 

அதிகரிக்கும் !!



மேஷம் :

மேஷ ராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு அமையும் துணை அன்பானவராகவும், நல்ல குணநலன்களை கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் இன்பமான வாழ்க்கை அமையும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவரக்கூடியவர்கள். இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக காதலை நிரூபித்து காட்ட சில செயல்களை செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, காதலில் பிரச்சனையை கொண்டுவரும் விவாதங்களை தவிர்த்தால் காதல் சிறப்பாக அமையும்.

கடகம் :

கடக ராசிக்காரர்கள் தங்களுடைய காதலன் அல்லது காதலி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை வகுத்து வைத்திருப்பார்கள். அதன்படியே நடந்தும் கொள்வார்கள்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பவரை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் காதலில் தங்களின் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் தன்னுடைய காதலன் அல்லது காதலி மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் பொதுவாக அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர்கள். காதலில் வெற்றி அடைய இவர்கள் அதிகமாக கஷ்டப்படுவார்கள்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள். நேர்மறை சிந்தனைகள் இவர்களின் காதலுக்கு வலு சேர்க்கும். விருச்சக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர்கள் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சகம் :

விருச்சக ராசிக்காரர்கள் காதலை விரும்புவார்கள். இவர்களுக்கு இன்பம், துன்பம் இரண்டும் கலந்த கலவையாக காதல் வாழ்க்கை அமையும்.

தனுசு :

இவர்களின் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் மேஷம்ஃமிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவார்கள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு காதல் உறவு வலுப்பெற்று அமையும். இவர்கள் தங்களின் துணையுடன் சிறிது கூடுதல் நேரத்தை செலவிட்டு மனம் விட்டு பேச வேண்டியது அவசியம்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பார்கள். காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். இதனால் இவர்களின் எதிர்பார்ப்பே சிறு சிறு பிரச்சனைகளுக்கு காரணமாய் அமையும்.

மீனம் :

மீன ராசிக்காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் தங்கள் காதலன் அல்லது காதலியை மிகவும் நேசிப்பார்கள். காதலில் இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார்கள். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

No comments: