இட்லி, தோசையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
உடலை ஆரோக்கியமாக
வைத்திருக்க உதவுவது உணவு. அதிலும், சரியான நேரத்திற்கு உண்பதே உடலுக்கு நன்மை தரும்.
சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மட்டுமின்றி ஆரோக்கியமான உணவை உட்கொள்வதே உடல்
நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.
பெரும்பாலானோர் காலை
உணவாக எடுத்துக் கொள்வது இட்லியும், தோசையும் தான். இட்லி தோசை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பது
உங்களுக்கு தெரியுமா?
இட்லி, தோசை மாவு :
இட்லி, தோசை மாவு :
அரிசியையும், உளுந்தையும்
ஊறவைத்து, பின்னர் அதனை அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைப்பார்கள்.
நன்றாக அந்த மாவு பொங்கியதும் மறு நாள் நம் தட்டில் இட்லி இருக்கும். இதில்
கலப்படம் ஏதும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் தைரியமாக சாப்பிடலாம்.
செரிமானம் :
இட்லி எளிதாக
செரிமானம் ஆகிடும் என்பதால் குழந்தைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தாரளமாக
கொடுக்கலாம்.
கலோரி :
இட்லி தோசையில் குறைவான கலோரியே இருக்கிறது. இது
சாப்பிட்ட உடனேயே நிறைவான உணர்வை தருவதால் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற
எண்ணம் தோன்றாது.
மினரல்ஸ் :
இட்லி தோசையில் இரும்புச்சத்து, கால்சியம் உட்பட
பல்வேறு மினரல்ஸ் இருக்கிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்தினால் ஹீமோக்ளோபின்
மற்றும் மையோக்ளோபின் ஆகியவை உடலில் அதிகமாக சுரக்கச் செய்கிறது.
வைட்டமின்ஸ் :
வைட்டமின்ஸ் :
இதில் ரத்த ஓட்டத்தை
சீராக்கும் மற்றும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்ஸ் அதிகமாக உள்ளது.
எனர்ஜி :
இட்லிஃதோசையில்
அதிகப்படியான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. இதனை எடுத்துக் கொள்வதால் உடனடி
எனர்ஜி கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் அதிகப்படியான கொழுப்பு சேராது என்பதால்
இட்லி தோசை சாப்பிடுவதில் தயக்கம் வேண்டாம்.
புரோட்டீன் :
தினமும் காலை உணவாக
இட்லி தோசையை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு
தேவையான புரோட்டீன் சத்து கிடைக்கும்.

No comments:
Post a Comment