இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடக்கூடாத உணவுகள்...!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இங்கு காண்போம்.
சாப்பிடக்கூடாத உணவுகள் :
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை
வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
அதைப்போல்
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை இனிப்பு
நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் எருமை பால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, கொழுப்பு நிறைந்த
உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, முட்டையின் மஞ்சள்
கரு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற
எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.
பிரட், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை போன்ற
உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை
அதிகரிக்கச் செய்கிறது.
சாப்பிடக்கூடிய உணவுகள் :
மேலே கூறிய
காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். மேலும் பீட்ரூட், கேரட்டை அளவாக
சாப்பிடலாம்.
ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை போன்ற
பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல்
மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவை சாப்பிடலாம்.
கோழிக்கறி, மீன், முட்டையின்
வெள்ளைக்கரு போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெயை அளவாக பயன்படுத்த வேண்டும்.
டீ மற்றும் காபி
ஆகியவற்றை அளவோடு தான் குடிக்க வேண்டும். வெள்ளரி, முளைக்கட்டிய பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட் (1 முதல் 2) போன்றவற்றை
சாப்பிடலாம்.

No comments:
Post a Comment